Tuesday, January 21

இன்று அதிமுக ஆவசர செயற்குழுக் கூட்டம் !

அதிமுக ஆவசர செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கட்சி தோல்வியைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் தோல்வியைப் பற்றிய விவாதம் மேற்கொண்டு, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில், வேட்பாளர்களின் தேர்வில் தவறுகள், தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பின்மை, உட்கட்சி சிக்கல்கள் போன்றவை குறித்த புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. கட்சியைப் பலப்படுத்த, அதிமுகவை ஒருங்கிணைக்க, மற்றும் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் கூறப்பட்டன. இதையடுத்து, 9-ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் ரத்துசெய்யப்பட்டு, அவசர செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய, சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களை நூறுக்கு மேல் அதிகரிக்கும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகக் கூடுதல் தேர்தல் பணிக்குழு அமைப்பது, இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிகளவில் சேர்ப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க  மெரினா கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் கருவி அமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *