திருப்பூர் மாவட்டம், அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள ஜவுளி கடையில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின. 3 அடுக்குகள் கொண்ட இக்கடையில் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டி சென்றுள்ளனர். திங்கள்கிழமை அதிகாலை திடீரென பூட்டிருந்த கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கி உள்ளது. இதை அறிந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர், தீயை நீண்ட நேரம் போராடி அனைத்தனர்.
இருப்பினும் முதல் தளத்திலிருந்த பல லட்சம் மதிப்பிலான ஜவுளி வகைகள் முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவிநாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜவுளி கடையில் தீ விபத்து
Follow Us
Recent Posts
-
பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுக சார்பில் மரியாதை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது….
-
பொள்ளாச்சியில் கல்வியை இடைநிறுத்திய மாணவர்களுக்கு மீண்டும் உயர்கல்வி வாய்ப்பு: நகரமன்றத்தின் சிறப்பு அழைப்பு….
-
தடகள வீரர்களுக்கு திருச்சியில் மாற்றம் அமைப்பு சார்பில் பாராட்டு விழா !
-
மது, ஆபாசம், ஒழுக்கக் கேடுகளிலிருந்து மக்களை காப்போம்: திருச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் விழிப்புணர்வு மனித சங்கிலி
-
திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா…
Leave a Reply