
கோவை நீலாம்பூரில் அமைந்துள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சர்வதேச தரம் கொண்ட ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) அங்கீகாரம் பெற்றுள்ளது. சென்னை தவிர, தமிழகத்தில் இதைப் பெற்ற முதல் மருத்துவமனை என்ற பெருமையை இம்மருத்துவமனை பெற்றுள்ளது.
சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றியமைக்காகவே, ஜே.சி.ஐ. அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையான உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முக்கிய அங்கீகாரமாகும்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் பேசினார். “ஜே.சி.ஐ. அங்கீகாரத்தைப் பெறுவது எங்கள் மருத்துவமனைக்கு பெருமையாகும். இது நோயாளி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் நாங்கள் கடைபிடிக்கும் உயர்தரத்திற்கான சான்றாகும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த சாதனையை எட்டியதற்கு மருத்துவர்கள், நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் ஒற்றுமையான முயற்சிகள் காரணம் என அவர் பாராட்டினார்.
சந்திப்பில், மருத்துவமனை குவாலிட்டி சர்வீஸ் துணை தலைவர் டாக்டர் காந்திராஜன், சர்வதேச தொடர்பு அதிகாரி டாக்டர் மனோகர், மருத்துவ இயக்குநர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி, தலைமை செயல் அலுவலர் டாக்டர் மணி செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
