சார்பதிவாளர் அலுவலகத்தில்  சோதனை!

விழுப்புரம் திரு.வி.க. நகரில்லுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில்  போலீசார் சோதனை நடத்தினர்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் தினந்தோறும் 40 முதல் 50 பத்திரப் பதிவுகள் நடைபெறும் நிலையில், கூடுதலாக பணம் பெறப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திங்கள்கிழமை(மே 20) இரவு துணைக் கண்காணிப்பாளர் சத்திய ராஜ் தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர்.இதில்,கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார், பணியிலிருந்த சார்பதிவாளர் லோகநாயகி உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்தினர்.மேலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க  2025ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க 2025 கிலோ கேக் தயாரிக்கும் பணியில் ஏராளமானோர் பங்கேற்பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

60.48 சதவீத வாக்குகள் பதிவாகின...

Tue May 21 , 2024
ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு திங்களன்று நடைபெற்றது.இதில்,60.48 சதவீத வாக்குகள் பதிவாகின.ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாராமுல்லாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. மாநிலத்தின் சில வாக்குச்சாவடிகளில் ஈ. வி. எம் குறைபாடுகள் தவிர, மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. Post Views: 128 இதையும் படிக்க  சாட்டை துரைமுருகன் விடுவிப்பு....
Screenshot 20240521 110713 inshorts - 60.48 சதவீத வாக்குகள் பதிவாகின...

You May Like