Thursday, February 13

தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்-நல்வாய்ப்பாக 27 பேர் உயிர்த்தப்பினர்…

நெல்லை மாவட்டம் திசையன்விளையிலிருந்து
27 பயணிகளுடன் சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, திருச்சியில் டயர் வெடித்து தீப்பிடித்து எறிந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த 27 பேரும் உயிர்த்தப்பினர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி 27 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுள்ளது.
இப்பேருந்து மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தினை
இன்று அதிகாலை சுமார் 02.10 மணிக்கு கடந்தபோது, பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து. இதன் காரணமாக பேருந்தின் பின்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டுனர் பேருந்தை மேம்பாலத்தின் மீது சாலையோரமாக நிறுத்திவிட்டு அதில் பயணம் செய்த 27 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கி உள்ளார். சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
சம்பவம் பற்றி தகவல் அறிந்த கண்ட்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் சுமார் 02.40 மணிக்கு சம்பவ இடம் வந்து பேருந்தின் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக தீக்கிரையாகியது. மேற்கண்ட சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. மேற்கண்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் மாற்று பேருந்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க  சிங்காநல்லூர் குளம்: ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *