ஒரே குடும்பத்தை சோர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை !

Screenshot 20240724 155646 InShot - ஒரே குடும்பத்தை சோர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை !

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கடன் சுமையால் 2 பிள்ளைகளை தூக்கில் மாட்டி கொலை செய்துவிட்டு தாயும் தூக்கி மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி – கீர்த்திகா தம்பதியினர்.

15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு கோகுல்நாத், சாய் நந்தினி என் இரு பிள்ளைகள் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள ரைஸ் மில் ஒன்றில் அரவைத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.கீர்த்திகா கூலி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் குடும்பத்தில் கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிஇருவரும் அவ்வப்போது கடனை எவ்வாறு திருப்பி கொடுப்பது பேசி மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கிருஷ்ணமூர்த்தி ரைஸ் மில்லுக்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து இன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மனைவி பிள்ளைகள் இரண்டு பேரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் சுமையால் மனவேதனையில் இருந்து வந்த கீர்த்திகா நேற்று இரவு பிள்ளைகளுக்கு சாப்பிட்ட உணவில் தூக்கம் மாத்திரை கலந்து கொடுத்து அவர்கள் மயக்க நிலையில் சென்றதும் இருவரையும் தூக்கில் மாட்டி கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் சுமையால் இரண்டு பிள்ளைகளை தூக்கு மாற்றி கொன்றுவிட்டு தாயும் தூக்கியெட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க  ஹோட்டல் உரிமையாளரை சிவில் அடிக்க பாய்ந்த சப்-இன்ஸ்பெக்டர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts