இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை

image editor output image 978631556 1725018366620 - இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் இவரது மனைவி சுகன்யா 30 வயது இவர்களுக்கு 7 வயதில் தனுஸ்ரீ மற்றும் 4 வயதில் அகிலன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அருண்குமார் மற்றும் சுகன்யா கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது மன உளைச்சலில் இருந்த சுகன்யா தனது இரண்டு குழந்தைகளையும் அருகே உள்ள கிணற்றில் வீசி அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

அப்பகுதியில் இருந்த மக்கள் ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் சுகன்யாவின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இச்சம்பவம் குறித்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,

இதையும் படிக்க  தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே உறவினர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts