8 முறை வாக்களித்த சிறுவன் கைது….

உத்தரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த 17வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஃபரூக்காபாத் தொகுதியில் 4-ம் கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களிக்கும் விடியோ இணையதளங்களில் வைரலானது.
இந்த விடியோவை காங்கிரஸ், சமாஜவாதி கட்சி அகிலேஷ் யாதவ் ஆகியோர் பகிர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்த நிலையில்,உத்திரப் பிரேதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜன் சிங் என்ற 17 வயது சிறுவனை கைது செய்தனர். இதனிடையே சிறுவன் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்திரப் பிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.

இதையும் படிக்க  பறவை மோதியதால் விமானம் ரத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்திய மருந்துகள்  திரும்பப் பெறப்படுகின்றன<br>

Mon May 20 , 2024
மருந்து தயாரிப்பு பிரச்சனைகள் காரணமாக, அமெரிக்க சந்தையில் இந்திய மருந்து நிறுவனங்களான Dr.Reddy’s Laboratories, Sun Pharma மற்றும் Aurobindo Pharma ஆகியவை தங்கள் மருந்துகளை திரும்பப் பெற்றுள்ளன. பரிசோதனை முறைகளில் (“assay”) பிரச்சனை இருப்பதாக சன் பார்மா நிறுவனமும், மாத்திரைகளின் நிறத்தில் மாற்றம் இருப்பதாக ஆரோபிண்டோ ஃபார்மா நிறுவனமும் தெரிவித்து Class II திரும்பப் பெறுகின்றன… Post Views: 182 இதையும் படிக்க  பிரான்ஸ் ஐரோப்பிய மக்களவை தேர்தலுக்காக […]
Screenshot 20240520 111256 inshorts - இந்திய மருந்துகள்  திரும்பப் பெறப்படுகின்றன<br>

You May Like