
கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (மே 24) தனது 79ஆவது பிறந்தநாளினைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”மாண்புமிகு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வெற்றியும் நிறைந்த வருடமாக அமையட்டும்” என்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.