இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி. செல்வராஜ் காலமானார். 67 வயதாகும் இவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார்.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர்.எம்.செல்வராஜ் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியை ஆற்றினார்.நாளை 14.05.2024 காலை 10 மணியளவில், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறயுள்ளது.