கோவா தபோலிம் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம், பறவை மோதலால் இன்று (ஆகஸ்ட் 14) காலை 6.45 மணிக்கு ரத்து செய்யப்பட்டது. பறவை மோதியதைக் கண்டதும், விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறவுள்ளதாகவும், விமானம் தற்போது கோவாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.