மே 25 ஆம் தேதி ஆறாம் கட்ட தேர்தல்

jharkhand polling c0ff5174 9095 11e8 90d0 8f805b857cc7 - மே 25 ஆம் தேதி ஆறாம் கட்ட தேர்தல்

மக்களவைத் தேர்தல்:ஆறாம் கட்டத் தோ்தலில் 889 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். கடந்த ஏப். 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்று வருகிறது. ஐந்தாம் கட்டத் தோ்தல் இன்று (மே 20) நடைபெற்று வருகிறது.
ஆறாம் கட்டத் தோ்தல் 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 58 தொகுதிகளுக்கு மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 1978 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தின் 14 தொகுதிகளுக்கு 470 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வேட்புமனுக்கள் பரிசீலனை, திரும்பப் பெறுவதற்கான கடைசித் தேதி நிறைவடைந்த நிலையில் 58 தொகுதிகளில் மொத்தம் 889 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இதையும் படிக்க  கடைசியாக தம்பிகளுக்கு ராக்கி கட்டி உயிரை விட்ட அக்கா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts