தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி, ஒரு உணவகத்தில் பணம் செலுத்தாமல் தொடர்ந்து உணவு சாப்பிட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் முத்தமிழ் எதிர்ப்பு தெரிவித்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் காவேரி கொலை மிரட்டல் விடுத்து, கடை உரிமையாளரை தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி தாக்க முயற்சித்தார் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியதால் […]
தமிழ்நாடு
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், புதன்கிழமை காலை பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் விரிவான சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், இந்த மிரட்டல் வெறும் புரளி என உறுதியாகி, வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்பொழுது, இந்த மிரட்டலை ஏற்படுத்திய மர்ம நபரை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கார் விற்பனை நிறுவனத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிறுவனத்தில் 70-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தீ பரவி 15-க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன. தீயை அணைக்க அண்மையில் இருந்த தொழிலாளர்களும் பொதுமக்களும், சூலூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் துரிதமாக செயல்பட்டு 50-க்கும் மேற்பட்ட கார்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. இந்நிலையில், […]
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் நேற்று அமாவாசை என்பதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது ஆனைமலை போலீசார் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் உடை அணிந்த பெண் ஒருவர் பாதுகாப்பு பணியில் பரபரப்பாக ஈடுபட்டு […]
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில், கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட உயிா்காக்கும் உபகரணங்கள் பல தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதனால் அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அவதியுறும் நிலை உருவாகியுள்ளது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, வட்டார மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு மகப்பேறு, எலும் மூட்டு அறுவை சிகிச்சை, பல், தோல், பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை, பொது மருத்துவம், சிறுநீரக சுத்திகரிப்பு, காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட 16 சிறப்பு பிரிவுகள் உள்ளன. நாள்தோறும் 1,000 […]
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று அமாவாசை என்பதால் அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து கொடிமரம் அருகே தங்கள் வேண்டுதலை நிறைவேற்று விதமாக தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தும் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய […]
2008 முதல் சேலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ASURRE AGROWTECH LIMITED கம்பெனியின் மூலமாக ரூபாய் 500 முதல் பல லட்சம் வரை சேமிப்பு திட்டம் உள்ளது என்றும் 500 வீதம் தொடர்ந்து ஐந்து வருடங்கள் கட்டினால் ஐந்து வருடங்களுக்கு மொத்தம் கட்டிய பணம் 30 ஆயிரம் கம்பெனி ரிட்டன் தருவதாக சொன்னது 38800 ஆயிரம் பிளஸ் 10% போனஸ் டோட்டல் அமௌன்ட் 41 ஆயிரத்து 800 ரூபாய் தருவதாக பாண்டு […]
பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்பவர் கைகளில் பதாகைகள் ஏந்தி மனு அளித்தார். மனுவில் ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தில் வசிக்கும் தனக்கு 1996 ஆம் ஆண்டு அரசு இலவசமாக இரண்டு சென்ட் நிலம் வழங்கியது கணவரை இழந்த நான் அந்த இடத்தில் வீடு கட்டி குடியேறலாம் என்று அதற்கான பணிகளில் செயல்பட்டேன் மேலும் அதற்குண்டான […]
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன் போது, காவல் துறை சார்பில் 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டதால், அந்த இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் விளக்கத்தில், வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால், அதை பரிசீலிக்க தயாராக உள்ளதாக காவல்துறை […]
வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பெரும்பாலும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்றுவருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கல்லூரியில் நடத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் சிலர் தங்களுக்குத் தரும் பாலியல் சீண்டல் குறித்து புகார் அளித்தனர். அவர்கள் கூறியபடி, சில பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் WhatsApp மூலம் ஆபாசக் குறிப்புகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியதோடு, வகுப்பறையில் நெருக்கமாக இருந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். […]