பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைக்கு அனுமதி இல்லை ஐகோர்ட் உத்தரவு…

images 79 - பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைக்கு அனுமதி இல்லை ஐகோர்ட் உத்தரவு...

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன் போது, காவல் துறை சார்பில் 3 அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டதால், அந்த இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன் விளக்கத்தில், வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால், அதை பரிசீலிக்க தயாராக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (Plaster of Paris) மூலம் செய்யப்பட்ட சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், மக்கக் கூடிய (eco-friendly) சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க  காரில் வந்து ஆடு திருடும் கும்பல் : கோவையில் பெண் உட்பட ஆறு பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *