தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி, ஒரு உணவகத்தில் பணம் செலுத்தாமல் தொடர்ந்து உணவு சாப்பிட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் முத்தமிழ் எதிர்ப்பு தெரிவித்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் காவேரி கொலை மிரட்டல் விடுத்து, கடை உரிமையாளரை தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி தாக்க முயற்சித்தார் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனின் உத்தரவின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் விசாரணை நடத்தி, காவேரியை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply