கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கார் விற்பனை நிறுவனத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிறுவனத்தில் 70-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தீ பரவி 15-க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன.
தீயை அணைக்க அண்மையில் இருந்த தொழிலாளர்களும் பொதுமக்களும், சூலூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் துரிதமாக செயல்பட்டு 50-க்கும் மேற்பட்ட கார்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன.
இந்நிலையில், கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது மற்றும் கார் பழுது நீக்கும் பகுதி, கார் விற்பனை பிரிவு, உதிரிபாகங்கள் வைக்கும் அறை, கணினி அறை போன்ற பகுதிகள் தீயால் சேதமடைந்தன.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply