வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பெரும்பாலும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்றுவருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கல்லூரியில் நடத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் சிலர் தங்களுக்குத் தரும் பாலியல் சீண்டல் குறித்து புகார் அளித்தனர். அவர்கள் கூறியபடி, சில பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் WhatsApp மூலம் ஆபாசக் குறிப்புகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியதோடு, வகுப்பறையில் நெருக்கமாக இருந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
இந்த புகாரின் அடிப்படையில், வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி தலைமையிலான நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்கள் முரளிராஜ், ஆய்வக உதவியாளர் அன்பரசு, மற்றும் ராஜபாண்டி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
Leave a Reply