கோவை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், மாணவ மாணவிகள் இன்று ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். இந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால், வயநாடு பகுதியில் பெரும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததால், மக்கள் துயரத்தில் மூழ்கினர். அவர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் சார்பாக, வயநாடு நிவாரண […]

புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அருண், முருங்கப்பாக்கம் சந்திப்பில் காவல் பணியில் இருந்தபோது, ஒரு முதியவர் சாலை கடக்க முயன்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் முதியவரை மது போதையில் இடித்து கீழே தள்ளிவிட்டு சென்றார். இந்தச் சம்பவத்தை கண்ட காவலர் அருண், அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயன்ற போது, அவர் காவலரை ஆபாசமாக திட்டி, தாக்க முயன்றார். மேலும், கொலை […]

கே.எப்.சி அதன் “ஓப்பன் கிச்சன்ஸ்” முன்முயற்சியின் கீழ், நுகர்வோருக்கு சமையலறையின் பின்னால் நடைபெறும் செயல்முறைகளை நேரடியாகக் காண அனுமதி வழங்குகிறது. இந்த நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கே.எப்.சி கிளையில் செப்டம்பர் 10 அன்று நடைபெற்றது. இந்த “ஓப்பன் கிச்சன் டூர்” மூலம், கே.எப்.சி தனது உணவுப் பாதுகாப்பு, தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் காட்ட, நுகர்வோருக்கு ஒரு பிரத்யேக வாய்ப்பை வழங்குகிறது. இந்த டூரின் போது, கே.எப்.சி உலகப் […]

பொள்ளாச்சியில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 53 விநாயகர் சிலைகள் அம்பராம்பாளையம் ஆற்றில் கரைக்கப்பட்டன. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் விநாயகர் சதுர்த்தி மூன்று நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் 53 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் அம்பராம்பாளையம் ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டிலுள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபம் பகுதியில் தொடங்கியதுடன், ஊர்வலம் […]

பாமக தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். அன்புமணி ராமதாஸ் அவர்களை இன்று கோவை விமான நிலையத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். அரசு ஊழியர் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்திற்கு அவரால் வெளியிடப்பட்ட ஆதரவுக்கும், ஜாக்டோ-ஜியோ-டிட்டோ போராட்டங்களில் பங்கேற்ற உயர்மட்ட நிர்வாகிகளுடன் அரசு பேசி தீர்வு காண வேண்டும் என்ற அவரது ஆழ்ந்த கருத்துக்கும் நன்றி தெரிவித்தோம். மேலும், மது இல்லா சமுதாயம் […]

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், அமெரிக்காவில் உள்ள தமிழக முதல்வர், 2000 கோடி ரூபாய் முதலீட்டில் திருச்சி மாவட்டத்தில் மின்சாதன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்தார். இதன் மூலம் சுமார் 5000 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் பேச்சாளர்களுக்கான ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கான […]

பொள்ளாச்சி நகர திமுக சார்பில், பொது உறுப்பினர் கூட்டம் லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் நகர கழக செயலாளர் இரா. நவநீதிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி, கழக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் ஆர். மகேந்திரன், நகர மன்ற தலைவர் முனைவர். சியாமளா நவநீதிகிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து […]

காரைக்கால் அருகே திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும் திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், விநாயகர், தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பாள் மற்றும் சனீஸ்வர பகவான் சன்னதிகளில் வழிபாடு செய்தார். அதன் பிறகு, ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

பொள்ளாச்சியில் பிரபலமான மாட்டுச்சந்தையில், மாட்டு வியாபாரிகள் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள். இன்று செவ்வாய்கிழமை என்பதால் சந்தை மிகவும் நெரிசலுடன் களை கட்டியது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாட்டு சந்தை வளாகத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு […]

கோவை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது, மேலும் ஆட்சியாளர்களின் திறமையற்ற நிர்வாகம் இதற்குக் காரணம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை ஆவாரம்பாளையத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மருந்தகத்தை திறந்து வைத்தார். இதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு மலிவு விலையில் மருந்துகள் அனைவருக்கும் […]