பொள்ளாச்சி நகர திமுக சார்பில், பொது உறுப்பினர் கூட்டம் லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் நகர கழக செயலாளர் இரா. நவநீதிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி, கழக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் ஆர். மகேந்திரன், நகர மன்ற தலைவர் முனைவர். சியாமளா நவநீதிகிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
1.தனது சூறாவளி சுற்றுப்பயணத்தால் 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விரைவில் துணை முதல்வராக நியமிக்க வேண்டும்.
2. பவள விழாவை, தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, அனைத்து கழக தோழர்களின் இல்லங்களில் திமுக கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும்.
3. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நவம்பர் 27 அன்று பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, விளையாட்டு போட்டிகள் நடத்தி, விழாவை விமர்சையாக கொண்டாட வேண்டும்.
இதையடுத்து, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி நகரத்தில் அதிக வாக்குகள் பெற்றுக் கொடுத்த 28ஆம் வார்டு செயலாளர் ஷேக், நகர மன்ற உறுப்பினர் நிலாபர் நிஷா, 14ஆம் வார்டு செயலாளர் பஷீர் பாய், நகர மன்ற உறுப்பினர் சுவீட் நாகராஜ் ஆகியோருக்கு தலா ஒரு அறை பவுன் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.