காரைக்கால் அருகே திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும் திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், விநாயகர், தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பாள் மற்றும் சனீஸ்வர பகவான் சன்னதிகளில் வழிபாடு செய்தார். அதன் பிறகு, ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.