பாமக தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். அன்புமணி ராமதாஸ் அவர்களை இன்று கோவை விமான நிலையத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
அரசு ஊழியர் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்திற்கு அவரால் வெளியிடப்பட்ட ஆதரவுக்கும், ஜாக்டோ-ஜியோ-டிட்டோ போராட்டங்களில் பங்கேற்ற உயர்மட்ட நிர்வாகிகளுடன் அரசு பேசி தீர்வு காண வேண்டும் என்ற அவரது ஆழ்ந்த கருத்துக்கும் நன்றி தெரிவித்தோம். மேலும், மது இல்லா சமுதாயம் உருவாக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதற்காகவும் நன்றி கூறினோம்.
இந்த சந்திப்பில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவரும், கோவை மாவட்ட ஜாக்டோ-ஜியோ நிதிக் காப்பாளருமான அருளானந்தம் அவர்கள் டாக்டர். அன்புமணி ராமதாஸ் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருடன் பாமக மாவட்ட செயலர் கோவை. ராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.
Leave a Reply