பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை கோட்டூர் அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்டிக்கடைகளில் கள்ள சந்தையில் குட்கா பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய காவல்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதில் கடந்த 2023 ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் பகுதியில் சுமார் 2 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிடிப்பட்டது.
இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சமர்ப்பித்தனர்.
இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆனைமலை காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மைக்கேல் ராஜ் உணவு பாதுகாப்பு அதிகாரி காளிமுத்து முன்னிலையில் ஆனைமலை பேரூராட்சி குப்பை கிடங்கில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது.