Thursday, February 13

மின்சாரம் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி!

பொள்ளாச்சி அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து, இரண்டு பெண் காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல அரிய உயிரினங்கள், யானை, மான், வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்டவை வாழ்கின்றன. இதன் அருகே உள்ள கோட்டூர் பருத்தியூர் உமாண்டி வன பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த களப்பணியாளர்கள், இரண்டு பெண் காட்டு யானைகள் தனியார் தோட்டத்தில் இறந்து கிடப்பதை கண்டுபிடித்தனர்.

மின்சாரம் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி!

தகவல் கிடைத்தவுடன் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பார்க்கவே தேஜா மற்றும் பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

மின்சாரம் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி!

உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள், தனியார் தோட்டத்திற்கு சென்ற போது தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி தாக்கி இறந்தது என்று கண்டறியப்பட்டது.

மின்சாரம் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி!
மின்சாரம் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி!

இறந்த யானைகளுக்கு உடற்கூறாய்வு செய்ய மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.

இதையும் படிக்க  திமுக எம்பி தயாநிதி மாறன் செல்வம் 5 ஆண்டுகளில் இருமடங்காக 7.82 கோடியாக உயர்ந்துள்ளது
மின்சாரம் தாக்கி 2 பெண் காட்டு யானைகள் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *