சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

837849 governmentbus - சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

சுதந்திர தினம் மற்றும் தொடர்ந்து வரும் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

அதன் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சுதந்திர தினம் மற்றும் அடுத்தடுத்த நாட்களில் உள்ள விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து மற்றும் பிற பகுதிகளிலிருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையின் கிளாம்பாக்கம் மையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி 470 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் 365 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி 70 பேருந்துகளும், ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் 65 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அதற்கு கூடுதலாக பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதையும் படிக்க  பவதாரணி திருஉருவ படத்திற்கு மரியாதை – விசிக தலைவர்

இவ்வாறு, மொத்தம் 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை பயணிகளின் தேவைக்கேற்ப, சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்புவதற்கான வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *