கோவை மாநகர முன்கள பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்…

புகைப்பிடிப்பதால் மட்டும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதில்லை, சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை நுரையீரல் மருத்துவர்கள் சங்கம் சார்பில், கோவை மாநகர முன் கள பணியாளர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் புரூக் பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

img 20241024 wa00091761222683759887532 - கோவை மாநகர முன்கள பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்...


முகாமில் மாநகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் இலவச நுரையீரல் பரிசோதனையில் பங்கேற்றனர். இதன் மூலம் நுரையீரல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று, முன் கள பணியாளர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்பட்டது.

மருத்துவர்களின் கருத்து:

சுற்றுச்சூழல் மாசு கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகரித்து, புகைப்பிடிப்பதுடன் இணைந்து நுரையீரல் பாதிப்பை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் நுரையீரல் ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியான இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்யவேண்டும் என்றும் கூறினர்.

அடுத்த மாதம் 21 முதல் 24 ஆம் தேதி வரை கோவையில் நடைபெறவுள்ள நுரையீரல் நோய்களுக்கான தேசிய மாநாட்டில் 3500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 100-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் இந்த மாநாடு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக் கூட்டம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீட்டு கதவை உடைத்து நகை திருடியவர் கைது...

Fri Oct 25 , 2024
பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னே கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வரும் வேலுமணி என்பவர் கடந்த 21.10.2024 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்குச் சென்றுள்ளார். பணிகளை முடித்து இரவு 9.00 மணிக்கு வந்து பார்க்கும்போது வீட்டு முன் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5.5 பவுண் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது […]
IMG 20241025 WA0043 - வீட்டு கதவை உடைத்து நகை திருடியவர் கைது...

You May Like