சென்னை விமான நிலையத்துக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.இதில் ,வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்ந்து வருகிறது.
இந்த மிரட்டலால் போலீசார் முழு வீச்சில் தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர். பிறகு அத்தகைய மிரட்டல்கள் வெறும் புரளி என கண்டறியப்படுகின்றன.