பொள்ளாச்சி ரயில் நிலையம் ரூ.7 கோடி வருவாய் ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தில்!

பொள்ளாச்சி ரயில் நிலையம் 2023-2024 ஆண்டில் 5.25 லட்சம் பயணிகளின் பயணத்துடன், ரூ.7 கோடி வருவாயை ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் 72வது இடத்திலும் உள்ளது.

img 20240912 wa0003924931030786675823 - பொள்ளாச்சி ரயில் நிலையம் ரூ.7 கோடி வருவாய் ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தில்!

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், காட்பாடி, கரூர், நாமக்கல், திண்டுக்கல், பழனி, விருதுநகர், கோவில்பட்டி, தென்காசி, மேட்டுப்பாளையம், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவைகள் உள்ளது.

img 20240912 wa00048691853344187366808 - பொள்ளாச்சி ரயில் நிலையம் ரூ.7 கோடி வருவாய் ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தில்!
img 20240912 wa00063222594488783732224 - பொள்ளாச்சி ரயில் நிலையம் ரூ.7 கோடி வருவாய் ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தில்!

இதை தொடர்ந்து, பொள்ளாச்சியில் இருந்து ராமேஸ்வரம், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை தாம்பரம், கோழிக்கோடு, மங்களூரு ஆகிய நகரங்களுக்கு புதிய ரயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.

img 20240912 wa00087898969541055903881 - பொள்ளாச்சி ரயில் நிலையம் ரூ.7 கோடி வருவாய் ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தில்!
img 20240912 wa00091195118658077565825 - பொள்ளாச்சி ரயில் நிலையம் ரூ.7 கோடி வருவாய் ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தில்!

ரயிலில் அதிகமாக பயணிப்பவர்களுக்காக, குறைந்த கட்டணத்தில் UTS mobile app அல்லது ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை சீசன் டிக்கெட்களை பெறலாம். உதாரணமாக, பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்ல ஒரு மாத சீசன் டிக்கெட் ரூ.270க்கு கிடைக்கிறது. இந்த சீசன் டிக்கெட் மூலம் அந்த காலகட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.

இதையும் படிக்க  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ரவுடி திருவேங்கடம் கைது!
img 20240912 wa00103107782529553678807 - பொள்ளாச்சி ரயில் நிலையம் ரூ.7 கோடி வருவாய் ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தில்!

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளுக்கான UTS mobile app, மற்றும் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான IRCTC app / website பயன்பாட்டை பயணிகள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

img 20240912 wa00071978968945623757660 - பொள்ளாச்சி ரயில் நிலையம் ரூ.7 கோடி வருவாய் ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை மண்டல திமுக பொறியியாளர் அணியின் ஆய்வுக் கூட்டம்: 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கான முடிவுகள்....

Thu Sep 12 , 2024
கோவை மண்டல திமுக மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகளின் பொறியியாளர் அணியின் ஆய்வுக் கூட்டம். மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, திமுக பொறியியாளர் அணியின் கோவை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் கோவை டாடாபாத் கிஸ்கால் கிராண்ட் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) அவர்கள் தலைமை தாங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் […]
IMG 20240912 WA0027 - கோவை மண்டல திமுக பொறியியாளர் அணியின் ஆய்வுக் கூட்டம்: 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கான முடிவுகள்....

You May Like