பொள்ளாச்சி ரயில் நிலையம் 2023-2024 ஆண்டில் 5.25 லட்சம் பயணிகளின் பயணத்துடன், ரூ.7 கோடி வருவாயை ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் 72வது இடத்திலும் உள்ளது.
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், காட்பாடி, கரூர், நாமக்கல், திண்டுக்கல், பழனி, விருதுநகர், கோவில்பட்டி, தென்காசி, மேட்டுப்பாளையம், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவைகள் உள்ளது.
இதை தொடர்ந்து, பொள்ளாச்சியில் இருந்து ராமேஸ்வரம், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை தாம்பரம், கோழிக்கோடு, மங்களூரு ஆகிய நகரங்களுக்கு புதிய ரயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.
ரயிலில் அதிகமாக பயணிப்பவர்களுக்காக, குறைந்த கட்டணத்தில் UTS mobile app அல்லது ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை சீசன் டிக்கெட்களை பெறலாம். உதாரணமாக, பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்ல ஒரு மாத சீசன் டிக்கெட் ரூ.270க்கு கிடைக்கிறது. இந்த சீசன் டிக்கெட் மூலம் அந்த காலகட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளுக்கான UTS mobile app, மற்றும் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான IRCTC app / website பயன்பாட்டை பயணிகள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply