கோவை மண்டல திமுக மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகளின் பொறியியாளர் அணியின் ஆய்வுக் கூட்டம்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, திமுக பொறியியாளர் அணியின் கோவை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் கோவை டாடாபாத் கிஸ்கால் கிராண்ட் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) அவர்கள் தலைமை தாங்கினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில், திமுக பொறியியாளர் அணி துணைச் செயலாளர் கு.சண்முகசுந்தரம் (முன்னாள் எம்பி), திமுக பொறியியாளர் அணி தலைவர் துரை.கி.சரவணன் (முன்னாள் எம்எல்ஏ), திமுக பொறியியாளர் அணி செயலாளர் எஸ்.கே.பி.கருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதலாக, கழக மாநில துணைச் செயலாளர்கள் பிரதீப், உமாகாந்த், பரமேஸ்குமார், கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் நா. பாபு, ஆர்.கண்ணதாசன், வைரமணி, வசந்தகுமார், என்.வி.எஸ்.செந்தில்குமார், ரங்கநாதன், பிரசாந்த் ராமமூர்த்தி, ஆண்டனி, ஞானவேல், அருண் குமார், கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், கோவை மண்டலத்தின் கீழ் உள்ள அனைத்து மாவட்டத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Leave a Reply