சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 27 நபர்களை செம்பியம் தனிப்பட்ட கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் சிலரை தனி இடத்தில் வைத்து செம்பியம் தனிபடை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர், மேலும் இந்த கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டு தலைமுறைகளாக உள்ள பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் அவருக்கு உடந்தைடியாக இருந்த வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகிய இருவரும் வெளிநாடு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இன்டோர் போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு அவர்களை கைது செய்து சென்னை அழைத்து வரும் முனைப்பில் சென்னை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திருவேங்கடம் என்ற ரவுடி துபாயில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த போது விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து சென்னை செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற செம்பியம் போலீசார் திருவங்கடத்தை கைது செய்து தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 28 வது நபராக ரவுடி திருவேங்கடம் என்பவரை துபாயில் இருந்து சென்னை வந்த போது போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply