Wednesday, January 15

“கோவையில் நடைபெற்ற ஒயிலாட்டம் அரங்கேற்றம்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக நடனம்”

கோவையை சேர்ந்த சிம்மக்குரல் கலைக்குழு சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம்,வள்ளிகும்மியாட்டம்,காவடியாட்டம் ஆகிய கலைகள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.கிராமப்புறங்களில் மட்டுமே இந்த கலைகளை பலர் கற்று வந்த நிலையில்,தற்போது இளம் தலைமுறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் இது போன்ற தமிழக பாரம்பரிய கலைகளை ஆர்வமுடன் கற்று வருகின்றனர்..

"கோவையில் நடைபெற்ற ஒயிலாட்டம் அரங்கேற்றம்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக நடனம்"

இந்நிலையில் இவ்வாறு பயிற்சி பெற்ற ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா விளாங்குறிச்சி பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது.திறந்த வெளி மைதானத்தில் காளைகளுடன்,பாரம்பரிய கலைகள் குறித்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் சிம்மக்குரல் கலைக்குழுவினரின் பம்பை இசைக்கு ஏற்றபடி கிராமிய பக்தி பாடல்களை பாட,அதற்கு ஏற்றாற் போன்று சிறுமியர்கள் மற்றும் இளம்பெண்கள் வண்ண உடைகளுடன் காலில் சலங்கை கட்டி ஒருசேர நடன அசைவுகளை வெளிப்படுத்தி கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்..

இதையும் படிக்க  அரசு மருத்துவமனைக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *