போலீஸ், நக்சலைட் குழு இடையே பயங்கர துப்பாக்கி சூடு.நக்சலைட்டுகள் தப்பி ஓட்டம்.பல்வேறு வகையான ஆயுதங்கள், வெடிகுண்டுகள், 28 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.
தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் எல்லையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சிபிஐ மாவோயிஸ் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசார் நடத்திய எதிர் தாக்குதலை சமாளிக்க இயலாமல் நக்சலைட்டுகள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்திய போலீசார் நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஆயுத குவியலை கண்டு பிடித்து அதில் இருந்த பல்வேறு வகையான ஆயுதங்கள், வெடி மருந்துகள், வெடிகுண்டுகள் மற்றும் 38 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.