கோவை ரயில் நிலையத்திற்கு மான் கொம்புகளுடன் வந்தவர் சிக்கினார்….


கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்தனர். இதில் ஒருவர் வைத்து இருந்த பையில் சந்தேகத்திற்கு இடமான பொருள் இருப்பதை காவல் துறையினர் கவனித்தார். உடனே காவல் துறையினர் அந்த பையை திறந்து பார்த்த போது அதில் இரண்டு மான் கொம்புகள் இருந்தன. உடனே அந்த பையை கொண்டு வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லட்சுமி சரண் என்பவரை காவல் துறையில் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஆவணங்கள் இன்றி மான் கோம்புகள் வைத்து இருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு மான் கொம்புகள் எப்படி கிடைத்தது ?  விற்பனை செய்ய கொண்டு வந்தாரா ?  என்பது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க  இருகூர் மற்றும் சிங்காநல்லூரில் இரயில் நிறுத்த கோரி மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பள்ளி கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம் <br>

Wed Aug 14 , 2024
உப்பிலிய புரத்தை அடுத்துள்ள சோபனாபுரம் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பழங்குடியின மாணவ  மாணவிகள் பள்ளி கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோபனபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது காஞ்சேரிமலை, புதூர் மற்றும் ஒடுவம்பட்டி ஆகிய கிராமங்கள் சோபனபுரம் ஊராட்சியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும் இப்பகுதிகளில் இருந்து   சோபனாபுரம்  மற்றும் வைரி செட்டிபாளையம்  […]
VideoCapture 20240814 094324 - பள்ளி கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம் <br>

You May Like