பள்ளி கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம்

VideoCapture 20240814 094324 - பள்ளி கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம் <br>

உப்பிலிய புரத்தை அடுத்துள்ள சோபனாபுரம் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பழங்குடியின மாணவ  மாணவிகள் பள்ளி கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோபனபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது காஞ்சேரிமலை, புதூர் மற்றும் ஒடுவம்பட்டி ஆகிய கிராமங்கள் சோபனபுரம் ஊராட்சியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும் இப்பகுதிகளில் இருந்து   சோபனாபுரம்  மற்றும் வைரி செட்டிபாளையம்  கோட்டப்பாளையம்  பள்ளிகளுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  தினமும் பேருந்தில் சென்று பயின்று   வருகின்றனர்.

இப் பகுதியில் இருந்து காலை, மாலை என தினசரி இருமுறை மட்டுமே அரசு பேருந்து  இயக்கபடுவதாக தெரிகிறது. காலை 6.30 மணிக்கும் மாலை 6 மணிக்கும் பேருந்து வந்து செல்லுவதாக இப்பகுதியில் வாழும்  பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சோபனபுரம் அரசு பள்ளிக்கு செல்லும் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காலை அரசு பேருந்தில் புறப்பட்டு ஏழு மணிக்கு பள்ளிக்கு சென்றடைவதாகவும்  பள்ளிக்கூடம் வழியாக கடந்து செல்லும் பேருந்து பள்ளி வளாகத்தின் அருகில் நிறுத்தப்படாமல் முன்னதாகவே ஒரு கிலோமீட்டருக்கு முன்பு மானவ மானவிகளை இறக்கி விடப்படுவதாகவும் புகார் எழந்துள்ளது. காலை 9:30 மணிக்கு தொடங்கும் வகுப்பு களுக்காக காலை ஏழு மணிக்கு முன்பே பள்ளி வளாகத்தை வந்தடையும் மாணவ மாணவிகள் தாங்கள் கொண்டு வரும் காலை உணவு வகைகளை பள்ளி வளாகத்திலேயே சாப்பிட்டுவிட்டு சுமார் 2 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது இதைப்பற்றி பெற்றோர்கள் போக்குவரத்து துறையினரிடம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதும் இந்த அரசு உடனடியாக நடவடிக்கை  எடுத்து பள்ளி நேரங்களில் பேருந்தை இயக்கவும் மேலும் பொதுமக்கள் மருத்துவம் மற்றும் வணிகம் அலுவலக சம்பந்தபட்ட  பயனம் கருதி  பேருந்து நேரத்தை மாற்றி இயக்க இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

இதையும் படிக்க  வனப்பகுதியில் யானை சடலம்: வனத்துறையினர் விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *