ண்ணச்சநல்லூர் எதுமலை சாலை பிரிவில் மின் கட்டண உயர்வு, கடந்த சில மாதங்களாக உரிய ரேஷன் பொருட்கள் வழங்காததாலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய, மாநில அரசு காவேரியில் இருந்து தண்ணீரை உடனடியாக பெற்று தர வேண்டியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூரில் உள்ள எதுமலை சாலை பிரிவில் திருச்சி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வு, கடந்த சில மாதங்களாக உரிய ரேஷன் பொருட்கள் வழங்காததாலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய, மாநில அரசு காவேரியில் இருந்து தண்ணீரை உடனடியாக பெற்று தர வேண்டியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். குமார் மற்றும் வடக்கு மாவட்ட கழக பொருளாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் தமிழகம் மற்றும் கர்நாடக அரசை கண்டித்து கண்டன உரை ஆற்றினார்.
இதுகுறித்து தேமுதிக தொழிற்சங்க பேரவை பொருளாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் நதிநீர் ஆணையம் தீர்ப்பளித்த பிறகும் கர்நாடக அரசு ஒரு டிஎம்சி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் அத்தியாவசிய விலைப் பொருள்களின் விலை உயர்வு மற்றும் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்காத தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் அரசியல் செய்வதற்காகவே மக்களை வஞ்சிக்கிறார்கள். எனவே தமிழக அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வி.பி.தங்கமணி, டைல்ஸ்சுதாகர் மற்றும் ஜனனி ஆறுமுகம், ராஜா, மாவட்ட நிர்வாகிகள் சடகோபன், பார்த்திபன் , முருகேசன் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பாஸ்கரன், நகர துணை செயலாளர் சரவணன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…..
Follow Us
Recent Posts
-
“ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை ஏற்க முடியாது: தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தது இந்தியாவிற்கும் அவமானம் – தமிமூன் அன்சாரி”
-
ரயில்வே போராட்டத்தில் உயிர்நீத்த 17 ஊழியர்களுக்கு செவ்வணக்கம்: பழைய ஓய்வூதியம் மீட்பு கோரிக்கையுடன் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
மீளாது விழா: தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிகழ்ச்சியில் 400 பேருக்கு உணவு வழங்கல்!
-
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை விமர்சித்த ஹெச். ராஜாவை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
-
தேங்காய்கள் விழுந்து சேதமடையும் ஓடுகள்: தென்னை மரம் அகற்ற கோரி வீட்டு உரிமையாளர் மனு
Leave a Reply