மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அதே போல திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட முயன்றனர்
ஜூலை ஒன்றாம் தேதி முதல் மூன்று சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது அன்றைய நாள் முதலே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது
திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் போராட்டம், ஆர்ப்பாட்டம் , மத்திய அரசு அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது
எட்டாம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது
கூட்டத்தில் பத்தாம் தேதி ரயில் மறியலில் ஈடுபடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்நிலையில் இன்று ரயிலை மறிப்பதற்காக வழக்கறிஞர்கள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் உள்ளே நுழைய முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் சிறிது தள்ளு முள்ளு ஏற்பட்டது
தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்