Tuesday, January 21

கோவையில் ஆட்டுக் குட்டிகளை வேட்டையாடிய மர்ம விலங்கு – தீவிர விசாரணையில் வனத்துறை..!

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.இதனால் பொது மக்களையும், வீட்டு வளர்ப்பு விலங்குகளையும் வேட்டையாடி செல்வது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடாகம் சுற்று வட்டார பகுதியில் கருஞ்சிறுத்தை ஆடு, மாடுகளை கொன்று அப்பகுதியில் உலா வந்ததாக செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இன்று காலை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவருக்கு சொந்தமான ஒர்க் ஷாப்பில் உள்ள இரண்டு ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றதாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர் ஆடுகள் காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.அது சிறுத்தை தாக்கி தான் உயிரிழந்ததா..? என ஆய்வு செய்து வருவதாகவும் மேலும் வனப்பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் சிறுத்தை வருவதற்கு வாய்ப்பில்லை என கூறிய அவர்கள் மேலும் தெரு நாய்கள், செந்நாய்கள் போன்ற மர்ம விலங்கு தாக்கி இருக்கலாம் என தகவல் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைகள் வந்த பின்னரே வேறு விலங்குகள் தாக்கியதால் உயிரிழந்ததா..? என தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  பொள்ளாச்சியில் இலவச வீட்டு மனையை அண்ணன் அபகரித்ததாக குற்றச்சாட்டு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *