பொள்ளாச்சி அருகே ஜலத்தூர் பகுதியைச் சேர்ந்த காயத்திரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக ஓட்டுநர் தங்கவேல் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டன் விரைந்து காயத்திரி வீட்டிற்கு சென்று, அவரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பிரசவ வலி அதிகரித்ததால், மணிகண்டன் ஆம்புலன்ஸில் இருந்தபடியே அவசர சிகிச்சை அளித்தார்.
சிறிது நேரத்தில் காயத்திரி ஆம்புலன்ஸில் அழகான ஆண் குழந்தையை பிறப்பித்தார். பிறகு, தாயும் குழந்தையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸில் சாமர்த்தியமாக செயல்பட்டு, பிரசவம் பார்த்து தாயும் சேயும் பாதுகாப்பாக இருந்ததை உறுதிப்படுத்திய தங்கவேல் மற்றும் மணிகண்டன் மீது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
Leave a Reply