பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது நகரம் முழுவதும் உள்ள 36 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் வணிக வளாகங்கள் திருமண மண்டபங்கள் உணவகங்கள் தங்கும் விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இனைப்புகள் கொடுக்கப்பட்டு கழிவு நீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு மாட்டு சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
ஆனால் நகரின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே கழிவு நீர் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படுவதால் பாதாள சாக்கடை குழிகளில் இருந்து கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறி ஆறு போல் சாலைகளில் ஓடுகிறது அதன் காரணமாக காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply