திருச்சி: TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 400 பேர் ஆர்ப்பாட்டம் – திமுக அரசின் வாக்குறுதி நிறைவேற்றாததை கண்டனம்
2013ஆம் ஆண்டு TET தேர்வில் சுமார் 40,000 பேர் தேர்ச்சி பெற்றிருந்தும், இதுவரை அவர்களுக்கு பணியமர்த்தப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் பணியமர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார் (வாக்குறுதி எண்: 177). ஆனால், ஆட்சியில் மூன்று ஆண்டுகள் கழிந்தும் இதுவரை பணி வழங்கப்படாததைக் கண்டித்து, TET தேர்வில் தேர்ச்சி பெற்றோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 400க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் கோரிக்கைகள்:
– தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்.
– இதுவரை நீதிமன்ற உத்தரவின் பேரில் 410 பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டு, மற்ற தேர்ச்சி பெற்ற 40,000 பேரையும் பணி வழங்க வேண்டும்.
– அரசாணை எண் 149 மூலம் புதிய நியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கொடூர முகமூடிகளை அணிந்து, திமுக அரசின் வாக்குறுதியை நிறைவேற்றாததை கடுமையாக கண்டித்தனர். மேலும், “வாக்குறுதியை நிறைவேற்று அல்லது எங்களை நாடு கடத்துங்கள்” என்றும், “திமுகவுக்கு ஆதரவு கொடுத்த எங்களை முதல்வர் வாழவிடவில்லை” என்றும் குற்றம்சாட்டினர்.
Leave a Reply