திருச்சி காவிரியாற்றில்
முதலைகள் நடமாட்டம் !

திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் புழக்கம் அதிமுள்ள பகுதியில் இரு முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


திருச்சி சிந்தாமணி காவிரிப்பாலம் பகுதியில், ஆற்றுக்குள் உள்ள மணல் திட்டுகளில் இரு முதலைகள் படுத்திருப்பதை சிலர் கண்டனர். இந்த தகவல் பரவியதையடுத்து பாலத்தில் சென்றவர்கள் அவற்றை வேடிக்கை பார்க்க குவிந்தனர். இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன.
இதற்கிடையில் காவிரி பாலத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதையடுத்து, கோட்டை காவல் நிலைய போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர்.இந்த நிலையில் வனத்துறையினர் அங்கு வந்து பார்த்த பொழுது முதலை நடமாட்டம்இருப்பது தெரிய வந்தது.ஆனால் இரவு நேரமானதால் முதலையை பிடிக்க முடியவில்லை.இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் திருச்சி வனத்துறை ரேஞ்சர் கோபிநாத் தலைமையிலான வனத்துறையினர் ட்ரோன் மூலமாக காவிரி பாலம் பகுதியில் முதலைகள் நடமாட்டம் இருப்பதை அறிந்தனர்.

இதையும் படிக்க  பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் இருவர் கைது .....

Sat Jun 29 , 2024
ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் இருவர் கைது மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய  1 வேன்,11 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னை அடுத்த செங்குன்றம் சுங்கசாவடி அருகில் வந்த லாரியை மடக்கி பிடித்த குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலிசார் சோதனை செய்ததில் லாரியில் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை பகுதிக்கு கடத்த முயன்ற சுமார் 8 டன் எடை கொண்ட ரேஷன் அரிசியையும்  ஒட்டுனரையும் […]
03 01 2023 odisharationcard - ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் இருவர் கைது .....

You May Like