
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி மற்றும் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போலீசார் போதைப் பொருட்கள், குட்கா, பான் மசாலா போன்றவற்றின் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில், உதவி ஆய்வாளர் கௌதம் மற்றும் போலீசார் கோபாலபுரம் சோதனைச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வந்த கேரள அரசு பேருந்தை சோதனை செய்த போது, மலப்புரத்தைச் சேர்ந்த முகமது சபீரின் உடமைகளில் 2 கிலோ கஞ்சா ஒளித்து கடத்தி வரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, முகமது சபீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தியது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.