ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் இருவர் கைது …..

03 01 2023 odisharationcard - ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் இருவர் கைது .....

ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் இருவர் கைது மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய  1 வேன்,11 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னை அடுத்த செங்குன்றம் சுங்கசாவடி அருகில் வந்த லாரியை மடக்கி பிடித்த குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலிசார்
சோதனை செய்ததில்

லாரியில் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை பகுதிக்கு கடத்த முயன்ற சுமார் 8 டன் எடை கொண்ட ரேஷன் அரிசியையும்  ஒட்டுனரையும் கைது  செய்தனர் போலீசார்
பின்னர் விசாரணை மேற்கொண்டனர்
விசாரனையில் சென்னை மூலக்கடை  பகுதியை சேர்ந்த வசந்த் மற்றும் மாரியப்பன் ஆகியோர்.

ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை பகுதியை சேர்ந்த நல்லனி என்பவருக்கு கடத்தி கொண்டு செல்ல இருப்பது  விசாரனையில் தெரியவந்தது
மேலும் மற்றொரு அதே இடத்தில் பாலவாயல் பகுதியில் வாகன சோதனையில் 3 டன் எடைக்கொண்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்ததில்

மூலக்கடையை சேர்ந்த அதே நபர்கள் வேறு வாகனத்தில் கடத்திய சென்றதும் விசாரணையில்  தெரியவந்தது
பின்னர் மொத்தம் 11 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமை பொருள் வழங்கல் குற்ற புலணாய்வு துறை போலீசார் இரண்டு வாகனங்களையும் ஒட்டி வந்த இரு ஓட்டுநர்களை கைது செய்ததோடு ,
ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து
மீதி உள்ள தலைமறைவான குற்றவாளிகளை  தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்

இதையும் படிக்க  பிரதமர் மோடிக்கு  கொலை மிரட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts