திருச்சி காவிரியாற்றில்
முதலைகள் நடமாட்டம் !

IMG 20240629 WA0008 - திருச்சி காவிரியாற்றில்<br>முதலைகள் நடமாட்டம் !

திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் புழக்கம் அதிமுள்ள பகுதியில் இரு முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


திருச்சி சிந்தாமணி காவிரிப்பாலம் பகுதியில், ஆற்றுக்குள் உள்ள மணல் திட்டுகளில் இரு முதலைகள் படுத்திருப்பதை சிலர் கண்டனர். இந்த தகவல் பரவியதையடுத்து பாலத்தில் சென்றவர்கள் அவற்றை வேடிக்கை பார்க்க குவிந்தனர். இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன.
இதற்கிடையில் காவிரி பாலத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதையடுத்து, கோட்டை காவல் நிலைய போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர்.இந்த நிலையில் வனத்துறையினர் அங்கு வந்து பார்த்த பொழுது முதலை நடமாட்டம்இருப்பது தெரிய வந்தது.ஆனால் இரவு நேரமானதால் முதலையை பிடிக்க முடியவில்லை.இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் திருச்சி வனத்துறை ரேஞ்சர் கோபிநாத் தலைமையிலான வனத்துறையினர் ட்ரோன் மூலமாக காவிரி பாலம் பகுதியில் முதலைகள் நடமாட்டம் இருப்பதை அறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *