
பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, ஓசோன் மண்டலத்தின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அவசியத்தை பற்றி பேசினார். மேலும், ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் பத்து மரங்களை வளர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியை தமிழாசிரியர் பாலமுருகன் ஏற்பாடு செய்தார். இறுதியில், “பூமிக்கு ஓசோன் மண்டலம் குடையாகப் பாதுகாப்பாக இருக்கிறது” என்பதைக் குறிக்கும் விதமாக, மாணவர்கள் குடை வடிவில் வரிசையில் அமர்ந்து ஓசோன் மண்டலத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி நடத்தினர். அதன் கீழ் “பூமி” என எழுத்து வடிவில் அமர்ந்த மாணவர்கள், ஓசோன் மண்டலத்தின் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.