Thursday, April 17

“நாயை காப்பாற்றச் சென்ற இளைஞர் கிணற்றில் தவறி விழுந்தது: 4 மணி நேர பரபரப்பு”

பொள்ளாச்சி அடுத்துள்ள வடசித்தூர் கிராமத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் சாய் ஸ்வரன் இவருடைய வளர்ப்பு நாய் அருகில் உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் தவறி விழுந்து விட்டது இதனை அறிந்து சாய் ஈஸ்வரன் அந்த ஊரில் உள்ள கிரேனை வரவழைத்து அதன் ரோப் வழியாக கிணற்றுக்குள் இறங்கினார் இறங்கும் பொழுது ரோப்பினுடைய பிடி தளர்ந்ததால் இவரும் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். கிணற்றில் படிக்கட்டுகள் இல்லாததால் மேலே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

"நாயை காப்பாற்றச் சென்ற இளைஞர் கிணற்றில் தவறி விழுந்தது: 4 மணி நேர பரபரப்பு"

இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் அதன் பின்பு அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இவரை கிணற்றில் இருந்து மீட்டனர் இவர் வளர்த்து வந்த நாயையும் இறுதியில் மீட்டனர் கிணற்றிலிருந்து. கிணற்றுக்குள் தவறி விழுந்த சாய் ஈஸ்வரனுக்கு சற்று கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாயை காப்பாற்ற சென்ற இளைஞர் கிணற்றில் தவறி விழுந்ததால் அப்பகுதியில் நான்கு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க  100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *