அருணாச்சல், சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை….


அருணாச்சல், சிக்கிமில் பேரவைகளின் பதவிக்காலம் இன்றுடன்(ஜூன் 2) நிறைவடைவதால், முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுடன், பேரவைத் தேர்தல் நடைபெற்ற அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்வர் பீமா காண்டு, துணை முதல்வர் சௌனா மெயின் உள்பட 10 பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் பவன் குமார் அறிவித்திருந்தார்.இந்த நிலையில், மீதமுள்ள 50 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடையும்போது, தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என்பதால் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


இதையும் படிக்க  ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராகுல் காந்தி ஆலோசனை!

Sun Jun 2 , 2024
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறயுள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்களுடன் இன்று(ஜூன் 2), அக்கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட […]
1712635252 1054 - ராகுல் காந்தி ஆலோசனை!

You May Like