மக்களவைத் தேர்தல் 7 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறயுள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்களுடன் இன்று(ஜூன் 2), அக்கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.