வட இந்தியாவில் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழப்புகள்:
- மேற்கு ஒடிசா – 19 பேர்
- உத்தரப் பிரதேசம் – 16 பேர்
- பிகார் – 5 பேர்
- ராஜஸ்தான் – 4 பேர்
- பஞ்சாப் – 1 பேர்
பாதிக்கப்பட்ட பகுதிகள்:
- ஹரியாணா
- சண்டீகர் – டில்லி
- உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகள்
- மத்தியப் பிரதேசம்
- பஞ்சாப்
- ராஜஸ்தானின் சில பகுதிகள்
- உத்தராகண்டின் சில பகுதிகள்
டில்லியின் முங்கேஷ்பூரில் உள்ள தானியங்கி வானிலை நிலைய சென்சார் கருவியில் தொழில்நுட்பக் கோளாறால் அதிகபட்ச வெப்பநிலையை விட சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். மே 29 அன்று முங்கேஷ்பூரில் வானிலை மைய சென்சாரில் அதிகபட்ச வெப்பநிலையான 52.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. அதைத்தவிர மற்ற சென்சாரில் 45.2 முதல் 49.1 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, சென்சார் கருவியில் தொழில்நுட்பக் கோளாறால் சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வரைவு அறிக்கையில் உறுதி செய்துள்ளார்.
Leave a Reply