4ஆம் கட்ட மக்களவை தேர்தல்;67% வாக்குப் பதிவு

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் மே 13 நடைபெற்ற 4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஆந்திரத்தில் பேரவைத் தோ்தலுடன் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெற்ற நிலையில், அந்த மாநிலங்களின் சில இடங்களில் அரசியல் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறைச் சம்பவங்களாக மாறின.திங்கள்கிழமை நடைபெற்ற நான்காம் கட்டத் தோ்தலுக்கு பிறகு, நாட்டில் வாக்குப் பதிவு நிறைவடைந்த தொகுதிகளின் எண்ணிக்கை 379-ஆக உயா்ந்தது. மீதமுள்ள 164 தொகுதிகளுக்கு மே 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிக்க  பிரதமர் மோடி குறித்த இன்ஸ்டா ரீலை பாஜக கர்நாடகா நீக்கியது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மும்பையில் 14 பேர் உயிரிழிப்பு!

Tue May 14 , 2024
மும்பையில்  கடுமையான புழுதிப் புயல் வீசி வருகின்றது. புழுதிப் புயலுடன் கூடிய மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தாணே மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பலமாக சூறைக்காற்றும் வீசியது.40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில், பலமாக வீசிய சூறைக்காற்றில் செட்டாநகர் சந்திப்பில் கட்கோபார் பகுதியில் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த […]
hoarding collapses in ghatkopar in mumbai 133307798 - மும்பையில் 14 பேர் உயிரிழிப்பு!

You May Like